திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் 1. தினப் பொருத்தம் 2. கணப் பொருத்தம் 3. மகேந்திர பொருத்தம் 4. ஸ்ரீ தீர்க்க பொருத்தம் 5. யோனி பொருத்தம் 6. ராசி பொருத்தம் 7. ராசியாதிபதி பொருத்தம் 8. வசிய பொருத்தம் 9. ரஜ்ஜி பொருத்தம் 10. வேதை பொருத்தம் 11. நாடி பொருத்தம் 12. மர (அ) விருட்ச பொருத்தம்